Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைதியை கடைப்பிடிக்குமாறு கென்ய மக்களிடம் வேண்டுகோள்

In உலகம்
Updated: 04:09 GMT, Oct 30, 2017 | Published: 04:09 GMT, Oct 30, 2017 |
0 Comments
1402
This post was written by : Suganthini

அமைதியைக் கடைப்பிடிக்குமாறு நாட்டு மக்களிடம் கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கென்யாவின் தலைநகரான நைரோபியிலுள்ள குடிசைப்பகுதியொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கென்யாவில் தற்போதைய ஆட்சி எவ்வளவு தூரம் பின்நோக்கிச் சென்றுள்ளது என்பதை வன்முறைச் சம்பவங்கள் வெளிக்காட்டுக்கின்றன என்பதுடன், இந்த ஆட்சியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலையில், அமைதியைக் கடைப்பிடிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.

மேலும், ‘அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளினாலேயே விளையாடப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கென்யாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில், உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ரைலா ஒடின்கா தேர்தலில் தோல்வி அடைந்தார்;.

இந்தத் தேர்தலில், முறைகேடு இடம்பெற்றதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், கென்யாவில் கடந்த 26ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடின்காவும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அத்துடன், கென்யாவின் சில இடங்களில் எதிர்கட்சி ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வன்முறை வெடித்துள்ளதுடன், சில இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் காரணமாக கென்யாவில் பதற்றமான சூழ்நிலைi நீடித்து வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg