Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

In இலங்கை
Updated: 10:59 GMT, Oct 30, 2017 | Published: 10:59 GMT, Oct 30, 2017 |
0 Comments
1118
This post was written by : Risha
kerala

வவுனியா, பேரூந்து நிலையத்தில் வைத்து ஒருதொகை கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் வவுனியா போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த கைது இடம்பெற்றதுடன், சந்தேகநபரிடமிருந்து 4 கிலோ 96 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மத்திய மாகாணமான மாத்தளையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனை சோதனையிட்ட போதே, கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg