Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு அரங்குகளில் நடைப்பயிற்சிக்கு கட்டணம் அறவீடு- நாளைமுதல் அமுலில்

In விளையாட்டு
Updated: 10:22 GMT, Oct 31, 2017 | Published: 10:21 GMT, Oct 31, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Elakkiya
201710311143098148_Now-pay-a-fee-to-walk-or-play-at-Tamil-Nadu-government_SECVPF

அரசுக்கு சொந்தமான விளையாட்டு அரங்குகளில் நடைபயிற்சி மற்றும் விளையாடுவதற்கு வரும் பொதுமக்களிடம் கட்டணம் அறவிடுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகம் தீர்மானித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விளையாட்டு அரங்குகளில் நாளை (புதன்கிழமை) முதல் கட்டணம் அறவிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டு அரங்குகள் நிதி ஆதாரமின்றி சரியான பராமரிப்பின்றிப் போகும் நிலையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 17 பலநோக்கு விளையாட்டு மைதானங்களும் 25 சிறிய விளையாட்டு அரங்குகளும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்ற நிலையில் இந்த புதிய நடைமுறை தொடர்பில் அனைத்து மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து என வரையறுக்கப்பட்டு அறவிடப்படவுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் பட்மின்டன் விளையாடுவதற்கு மாதம் 100 ரூபாவும் கிராமங்களில் 300 ரூபாவும் கட்டணமாக அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் இந்த நடவடிக்கைக்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைப்பயிற்சி சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg