Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலியல் அவதூறு: நற்பெயரை களங்கப்படுத்தும் செயல் என அமைச்சர் நிராகரிப்பு

In
Published: 04:57 GMT, Nov 7, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Risha

முன்னாள் மூத்த பொலிஸ் அதிகாரியின் கூற்றுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், அரசியலில் தனது நற்பெயரை களங்கப்படுத்தும் செயல் என்றும் அமைச்சரவை அமைச்சர் டேமியன் கிறீன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் அமைச்சருடைய கணினிகளில் ஒன்றில் ஆபாசப் படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக முன்னாள் பெருநகர பொலிஸ் உதவி ஆணையாளர் பொப் குயிக் குறிப்பிட்டார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் வெளியான நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடி வருகின்றது. இந்நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் அவதூறு வழக்குகளில் சிக்கியவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூத் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)