Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ். பிடியிலிருந்த முக்கிய நகரம் சிரிய படையினர் வசமானது

In உலகம்
Published: 07:12 GMT, Nov 9, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Elakkiya

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கடைசி பிரதான நகரான அல்பு கமால் சிரிய இராணுவம் மற்றும் கூட்டணிப் படைகளால் மீளக் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரிய அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் எல்லைக்கு அருகில் இடம்பெற்ற இந்த போர் நடவடிக்கையில் ஈரானிய ஆதரவுபெற்ற நூற்றுக்கணக்கான ஷியா ஹிஸ்புல்லா போராளிகளும் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகின்றது. சிரிய அரச சார்பு கூட்டணிப் படையின் தளபதியை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பு குழு அல்பு கமால் நகரப் பகுதியில் இன்னமும் மோதல் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கின் பரந்தளவான பகுதிகளை கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர். இந்நிலையில் மாகாண தலைநகரான Deir al-Zour,  கடந்த வெள்ளிக்கிழமை சிரிய படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதேநாளில் ஈராக்கில், அல் குவாய்ம் எல்லையை கடந்து ஈராக்கிய படைகள் சென்றன.

அமெரிக்க ஆதரவிலான சிரிய ஜனநாயகப் படைகளும் இப்பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் கடந்த மாதம் ரக்கா நகர் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)