Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்தளாயில் மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 12:38 GMT, Nov 10, 2017 | Published: 11:25 GMT, Nov 10, 2017 |
0 Comments
1242
This post was written by : Arul Jesu

கந்தளாய் நகர் பகுதியில் மதில் ஒன்று இடிந்து விழுந்ததில் நீர்  வழங்கல்  வடிகாலமைப்பு   சபையின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா வில்வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எம்.ஹபீபுல்லா என்ற 32 வயதானவர் என கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் நீர் குழாய் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகிலிருந்த மதில் திடிரென்று இடிந்து விழுந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ள நிலையில் சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg