Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்றலோனிய நெருக்கடி: ஸ்பெய்ன், பெல்ஜியம் பிரதமர்கள் கலந்துரையாடல்

In
Published: 10:47 GMT, Nov 18, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Suganthini
spain

கற்றலோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை தொடர்பில் ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோயும் பெல்ஜியம் பிரதமர் சார்ள்ஸ் மைக்கேலும் (Charles Michel)   கலந்துரையாடியுள்ளனர்.

சுவீடன், கோதன்பெர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளச்சென்ற இரு பிரதமர்களும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, கற்றலோனிய விவகாரம் தொடர்பிலும் இவர்கள் இருவரும் கவனம் செலுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்டபோது, இதற்கு ஆதரவு தெரிவித்து 90 சதவீதமான வாக்களித்திருந்தனர். இதனையடுத்து, கற்றலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான அறிவிப்பை கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) அறிவித்திருந்தார்.

கற்றலோனிய சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளாத ஸ்பெய்ன் அரசாங்கம் கற்றலோனியாவை தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்ததுடன், எதிர்வரும் டிசெம்பர் 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அத்துடன், கற்றலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட அதிகாரிகளையும் ஸ்பெய்ன் அரசாங்கம் பதவி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg