Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கிற்கு இந்திரா காந்தி விருது!

In இந்தியா
Updated: 05:22 GMT, Nov 19, 2017 | Published: 05:22 GMT, Nov 19, 2017 |
0 Comments
1328
This post was written by : Kemasiya

இந்த ஆண்டுக்கான இந்திராகாந்தி விருதினை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பெற்று கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தியின் மறைவிற்கு பின்னர், அமைதி, நாட்டின் வளர்ச்சி உட்பட ஆயுதப்பரவல் தடை, ஆகியவற்றில் சிறந்து விளங்கியோருக்கு  வழங்கப்படும் இந்திராகாந்தி விருது, இவ் வருடம் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்படவுள்ளது.

இவர் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவுடன் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்காகவும் பருவ நிலை மாறுபாடு விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும்  இவ் விருதினை, கடந்த ஆண்டு விண்வெளி ஆராட்சி நிலையமான இஸ்ரோ பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg