Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: செந்தில் பாலாஜி

In இந்தியா
Published: 09:09 GMT, Nov 24, 2017 |
0 Comments
1459
icon_com
This post was written by : Vithushagan

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அ.தி.மு.க. அம்மா அணி ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”ஆர்.கே. நகர் தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை வேட்பாளராக மீண்டும் போட்டியிட ஆட்சி மன்ற குழு முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தவர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துரோகம் செய்து விட்டார். ஆனால் அவர் உழைப்பால் வந்தது  பதவி என கூறி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி கடந்த 1991 மற்றும் 2001ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது அவருக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவி வழங்கவில்லை.

2011ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சி பதவி வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் பதவியை கொடுத்தது துணை பொதுச்செயலாளர் சசிகலாதான்.

மேற்கு மண்டலத்தில் இருப்பவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். ஆனால் இதனை மாற்றி எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டார்.

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் தினகரனை வெற்றி பெற செய்து உண்மையான அ.தி.மு.க. நாம் தான் என நிரூபிக்க வேண்டும்.

ஒரு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். மட்டுமல்லாது ஓராயிரம் ஓ.பி.எஸ்., ஈபி.எஸ். வந்தாலும் தினகரனை வெற்றி பெற முடியாது.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து காண்பிக்கட்டும். அவருக்கு அந்த தெம்பு, திராணி இல்லை. ஆட்சி மாற்றம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும்” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg