Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போன சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 07:38 GMT, Nov 28, 2017 | Published: 07:38 GMT, Nov 28, 2017 |
0 Comments
1440
This post was written by : Elakkiya

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த சகோதரர்கள் இருவரின் சடலங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் பிற்பகல் 2 மணியளவில் மேற்படி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சடலங்களை நேரில் பார்வையிட்ட ஹட்டன் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

DSC00069

மஸ்கெலியாவில்  சகோதரர்களை காணவில்லை- ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவரவில தோட்டம் பக்றோ பிரிவில் வசித்துவந்த சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு கணேமுல்ல பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரியும் 28 வயதான சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரும் அவருடைய தங்கையான 19 வயதுடைய பரமேஷ்வரன் மகாலெட்சுமி ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 23 ஆம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வருகை தந்திருந்ததாகவும் 26 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்தபோதே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறிருக்க இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில சிங்கள பாடசாலை ஒன்றிற்கு அருகில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, பொலிஸ் மோப்ப நாய் கவரவில ஆற்று பகுதியை நோக்கி சென்றதையடுத்து மேற்படி சகோதரர்கள்  இருவரும் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதற்கேற்ப யுவதி மற்றும் இளைஞனின் காலணி, கைக்குட்டை, ஆடைகள் ஆகியன ஆற்றப்பகுதியிலும், கெப் ரக வாகனத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கியிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

DSC00041 DSC00042 DSC00031 DSC00026 DSC00023

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg