Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எந்த மண்ணிலும் சாதிக்கும் – கபில்தேவ்

In கிாிக்கட்
Updated: 05:46 GMT, Dec 1, 2017 | Published: 05:46 GMT, Dec 1, 2017 |
0 Comments
1771
This post was written by : Sujitharan

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தாய்நாட்டில் மாத்திரமல்லாது, வெளிநாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என, முன்னாள் சகலதுறை வீரர் கபில்தேவ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய இந்திய அணியை வீழ்த்துவதென்பது மிகக்கடினமான ஒரு விடயம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கைத் தொடருக்கு பின்னரான, தென்னாப்பிரிக்க தொடர் குறித்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

”இந்திய அணிக்கு தென்ஆப்பிரிக்கா என்றாலும், ஆஸ்திரேலியா என்றாலும் எல்லாமே ஒன்றுதான். அணியை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என தலைவர் கோஹ்லி நன்கு அறிந்து வைத்துள்ளார்.

தற்போதைக்கு டெஸ்ட் விளையாடும் அணிகளில் இந்திய அணி மிகச்சிறந்த ஒரு அணியாக விளங்குகிறது. ஆனாலும் எங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது.

அது, இறுதி பதினொருவர் அணியில் யாரைச் சேர்ப்பது என்பதுதான். அந்த அளவிற்கு சகல வீரர்களும் மிகச்சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர்.‘ என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg