Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அண்ணன் – தங்கை உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது!

In இலங்கை
Published: 07:52 GMT, Dec 1, 2017 |
0 Comments
6120
icon_com
This post was written by : Ravivarman
DSC00058

காணாமல் போயிருந்த நிலையில், மஸ்கெலியா – கவரவில பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட அண்ணன், தங்கை ஆகிய இருவரினதும் உயிரிழப்பிற்கான காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனை நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிலையில், குறித்த இருவரும் நீரில் மூழ்கியமையால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 வயதான சுப்பிரமணியம் மகேந்திரன் 19 வயதுடைய பரமேஷ்வரன் மகாலெட்சுமி ஆகிய இருவருமே உயிரிழந்திருந்தனர்.

கொழும்பு – கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த அண்ணன், தங்கை இருவரும் பாக்றோ தோட்டத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)