Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் இளவரசர் ஹரி பங்கேற்பு

In
Published: 06:03 GMT, Dec 2, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Suganthini

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கிலும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

உலக எய்ட்ஸ் தினம், ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் தங்களது திருமண அறிவிப்பையடுத்து, முதற்தடவையாக பொது நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய இங்கிலாந்திலுள்ள நொட்டிங்ஹாம் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரெரன்ஸ் ஹிக்கின்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்வின்போது, எச்.ஐ.வி.க்கு எதிராக விழிப்புணர்வு பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் நினைவுகூரப்பட்டனர்.

பிரித்தானியாவின் முடிக்குரிய சிம்மாசனத்தின் ஐந்தாவது வாரிசான இளவரசர் ஹரியும் அவரது காதலியான மேகன் மாக்கிலும் எதிர்வரும் மே மாதம்  திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக, இந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg