Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் வெங்கடேஷ்!

In சினிமா
Updated: 13:23 GMT, Dec 2, 2017 | Published: 13:23 GMT, Dec 2, 2017 |
0 Comments
1231
This post was written by : Ravivarman

பல வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் தற்போது இயக்கி இருக்கும் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவை கனடாவில் நடத்தவுள்ளார்.

இதுவரை 22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தப் படத்தில் வினய், தமன் கதாநாயகர்களாகவும், ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிஷா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் நேத்ரா படமும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளதுடன், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg