Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது எப்படி? – மார்டின் வீதியில் மந்திராலோசனை

In இலங்கை
Updated: 10:49 GMT, Dec 3, 2017 | Published: 10:49 GMT, Dec 3, 2017 |
0 Comments
1679
This post was written by : Ravivarman

உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் வகுக்கப்பட வேண்டிய வியூகங்கள் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதன்போது பங்காளிக் கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பங்கீடுகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) அக்கட்சியின் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர், செயலாளர், புளொட் அமைப்பு சார்பாக மாகாண அமைச்சர் சிவனேசன், மற்றும் ரெலோ அமைப்பின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைய செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தலை துாக்கியுள்ள விமர்சனங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் எதிர் தரப்பினரின் பிரசாரங்களை கையாளுதல் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

IMG_8446

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg