Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாரிடமும் ஆதரவு கேட்கமாட்டேன் – நான் அரசியல்வாதி அல்ல என்கிறார் விஷால்

In இந்தியா
Updated: 06:08 GMT, Dec 4, 2017 | Published: 06:08 GMT, Dec 4, 2017 |
0 Comments
1599
This post was written by : Puvanes

தேர்தல் செயற்பாடுகளில் பின்னணியில் யாரும் செயற்படவில்லை எனவும் தேர்தலுக்கு யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இன்று(திங்கட் கிழமை) சென்னை ராமாபுரத்திற்கு சென்ற விஷால் அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் சிலைகளுக்கு மாலைகளை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் ஊடகவியாலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, ரஜனி மற்றும் கமலிடம் தேர்தலுக்கான ஆதரவு கேட்பீர்களா என ஊடகவியலாளர்கள் விஷாலிடம் கேள்விகளை முன்வைத்தனர்.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது “நான் யாரிடமும் ஆதரவினைக் கேட்க மாட்டேன் எனக் குறிப்பிட்ட அவர், நான் ஒரு அரசியல்வாதி அல்ல மக்களின் பிரதிநிதியாகவே களம் இறங்குகின்றேன் எனக்  கூறியுள்ளார்.

மேலும், ஆர்கே.நகரில் வசிக்கும் மக்களின் நம்பிக்கையையும், தைரியத்தையும் ஆதரவாக எடுத்துக்கொண்டே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தயாரிப்பு சங்கத் தலைவரும் நடிகர்சங்கத்தின் செயலாளருமான நடிகர் விஷால் இன்று ஆர். கே. நகர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg