Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய அரசாங்கத்தை குழப்பாமல் தீர்வை பெற வேண்டும்: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 08:23 GMT, Dec 4, 2017 | Published: 08:23 GMT, Dec 4, 2017 |
0 Comments
1356
This post was written by : Risha

தேசிய அரசாங்கத்தை குழப்பாமல் ராஜதந்திரத்தை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பினூடாக நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மனிதநேய கரங்கள் அமைப்பும், கனடாவின் தமிழ் மனிதநேய கரங்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த கார்த்திகை தீபத்திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”கடந்த காலத்தில் இருந்த அச்சநிலை நீங்கி இன்று ஓரளவு சமாதான சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழும் நிலையில் இது நீடித்த சமாதானமாக அமைய வேண்டும்.

முப்பது வருடகால யுத்தத்தில் பல இழப்புகளை இழந்துநிற்கும் தமிழ் சமூகத்திற்கு எதிர்வரும் 2018இல் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் சுதந்திரமான நிலைமை உருவாக்கப்படவேண்டும்.

நாட்டின் இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டில் அரசியல் தீர்வினை கொண்டுவர முயற்சிக்கின்றது. ஆனால், பல இனவாத, மதவாத அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதனை குழப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் ரத்த ஆறு ஓடும் நிலையை நாட்டில் ஏற்படுத்துவதற்கே அவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது” என்றார்.

DSC03386

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg