Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 08:57 GMT, Dec 5, 2017 | Published: 03:05 GMT, Dec 5, 2017 |
0 Comments
5208
This post was written by : Puvanes

இன்று முதல் வெள்ளிக்கிழமை வரையில் நாட்டில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் தொடர்பாக மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டும் என இடர்முகாமைத்துவ அமைச்சு எச்சரித்துள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண திடீர் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் அடிக்கடி விடுக்கப்படும் ஆலோசனைகளைப்பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று நடந்த ஊடகசந்திப்பின் போது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் கருத்து தெரிவித்த போது,

இலங்கையில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர்கள் தொலைவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காற்றழுத்த மண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது தாழமுக்கமாக மாற்றமடைந்துள்ளது.

இந்தநிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாற்றமடையக் கூடும். இதன் காரணமாக மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து திரும்புவது அவசியம், அத்துடன் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலையில் குறித்த தாழமுக்கம் வலுவடைந்து வருவதனால் இன்றும், நாளையும் நாடுமுழுவதும் அடை மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg