Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களை திசைதிருப்பும் சதித்திட்டத்தில் ராஜபக்ஷாக்கள்: அமைச்சர் மங்கள சாடல்

In இலங்கை
Updated: 05:48 GMT, Dec 6, 2017 | Published: 02:48 GMT, Dec 6, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Varshini
mangala

நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி மக்களை திசைதிருப்பும் சதித்திட்டத்தில் கடந்த ஆட்சியாளர்கள் செயற்படுவதாக, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொக்ஸ் எனப்படும் அதிநவீன தொழிநுட்பத்தை, நாமல் ராஜபக்ஷவே அதிகம் பயன்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவ்வாறான சதித்திட்டங்களால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட ஊடக அடக்குமுறை இல்லாமல் செய்யப்பட்டு, தற்போது முன்னேற்றம் கண்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார். அத்தோடு, நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி இடம்பெற்று, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)