Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு

In இந்தியா
Updated: 10:45 GMT, Dec 8, 2017 | Published: 04:35 GMT, Dec 8, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Kemasiya
dfdf

ஓஹி புயலில் சிக்குண்டு நடுக்கடலில் தத்தளித்த 662 மீனவர்கள், கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரையில் 622 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,  அதில் 259 மீனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“குறித்த அனர்த்தம் காரணமாக கடற்கரையினை அடைந்த  1,660 தமிழக மீனவர்கள், 139 மீன்பிடி படகுகளுடன் குஜராத், மராட்டி,  கர்நாடகா, லட்சதீவு, கால்பேனி, பிட்ரா,  கில்டாக்,  அகாத்தி,  சீலெட் ஆகிய பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அத்துடன் வங்காள விரிகுடாவில்  ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழக மற்றும் ஆந்திர மீனவர்களை கரைக்கு திரும்புமாறு, மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மீனவர்களிடம் சி.ஜி.டொர்நியர் கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்குள் சென்று வலியுறுத்தியுள்ளது.

மேலும் கிழக்கு கடற்பகுதியில், இந்திய கடலோர காவல்படையை சேர்ந்த 9 கப்பல்கள் தமிழக மற்றும் ஆந்திரா கடலில் உள்ள மீனவர்களை கரையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன.” என மேற்குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)