Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் அறுவர் கைது!

In இலங்கை
Updated: 06:24 GMT, Dec 8, 2017 | Published: 06:24 GMT, Dec 8, 2017 |
0 Comments
1245
This post was written by : Ravivarman

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த கொழும்பைச் சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜெயசீலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பூநொச்சிமனையில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது நேற்று மாலை (வியாழக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டனர். கிராண்ட்பாஸ், புதுக்கடை, மாளிகாவத்தை, மருதானை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து 7 பக்கட் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்க மறியில் வைக்குமாறு பதில் நீவான் எம்.ஐ.எம்.முகைதீன் உத்தரவிட்டார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

S5160003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg