Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானுக்கு ஆதரவளிக்க தயார்: ரஷ்யா

In உலகம்
Updated: 12:07 GMT, Dec 15, 2017 | Published: 09:07 GMT, Dec 15, 2017 |
0 Comments
1371
This post was written by : Risha

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், காபுல் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு ரஷ்யா தயாராகவுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வருடாந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஆப்கானிஸ்தானில் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் வட எல்லையிலுள்ள பெரும்பாலான பகுதிகளை பயங்கரவாதக் குழுக்கள் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில், காபுல் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்துள்ளது. அந்தவகையில், பொலிஸ், ராணுவம் உள்ளிட்ட உள்நாட்டு சேவை பிரிவுகளில் அவர்களுக்கு உதவுவதற்கு நாம் தயாராக உள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg