Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரணில் – மனோ பேச்சு தோல்வி! – இரண்டு தசாப்தங்களின் பின்னர் தமிழரின் கையில் கொழும்பு?

In இலங்கை
Updated: 09:39 GMT, Dec 17, 2017 | Published: 09:39 GMT, Dec 17, 2017 |
0 Comments
1398
This post was written by : Varshini

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் தனித்து போட்டியிடவுள்ளது. இதன்மூலம் இரண்டு தசாப்தங்களின் பின்னர் தமிழர் ஒருவரின் கைகளுக்கு கொழும்பு மாநகர சபை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சண். குகவரதன், எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஆசனப் பங்கீடு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியானது, ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு ஆறு ஆசனங்களைப் பெற்று தமது பலத்தை நிரூபித்திருந்தது. அந்தவகையில், கொழும்பு மாநகர சபையில் மீண்டும் தமது பலத்தை நிரூபிப்போம் என்று சண்.குகவரதன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கே. கணேசலிங்கம் என்பவர் கடந்த 96 – 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மாநகர மேயராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg