Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொஸ்டரிகாவில் விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 04:05 GMT, Jan 1, 2018 |
0 Comments
1170
This post was written by : Suganthini

கொஸ்டரிகா நாட்டில் பயணிகள் விமானமொன்று விழுந்து நொருங்கியதில், 12 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப்பயணிகள் கூடும் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வூடட் பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதன்போது, 2 விமானிகள் உட்பட அமெரிக்கப் பிரஜைகள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

208பி எனும் இலக்கமுடைய விமானம் புறப்பட்டுச் சிறிதுநேரத்தில் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த விபத்தில் அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளமையை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg