Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கலை இலக்கிய பெருவிழா!

In இலங்கை
Published: 07:32 GMT, Jan 1, 2018 |
0 Comments
1088
This post was written by : Risha
athavan1

தமிழ் பண்பாடும் கலாசாரமும் அழிந்துவரும் இக்காலகட்டத்தில், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டினாலான கலை இலக்கிய பண்பாட்டு பெருவிழா யாழில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ளது.

விழாவில், அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிசியஸ், றியூனியன், மியான்மார், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைத்தரும் தமிழ்ப் பேராளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடகா ஆகிய இடங்களில் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் ஆசிய ஒன்றிய தலைவர் செந்தமிழ்த் தேனீ இரா.மதிவாணன் மேற்கொண்டு வருகிறார்.

இரண்டு அரங்கங்களாக இடம்பெறும் இந்த நிகழ்வுகளில் காலை வண.தனிநாயகம் அடிகளார் அரங்கிலும், பிற்பகல் நிகழ்வு குரும்பசிடி இரா. கனகரத்தினம் அரங்கிலும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

மேலும் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய ஆய்வரங்கம், பிரபல கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம், நடனம், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள் என தமிழர் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளும் நடைபெற இருப்பதுடன், தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் பவனியும் யாழ் நகரில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg