Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூர்யாவுடன் நடிப்பேன் என்பது எனது சவால்: கீர்த்தி சுரேஷ்

In சினிமா
Updated: 11:00 GMT, Jan 1, 2018 | Published: 11:00 GMT, Jan 1, 2018 |
0 Comments
1463
This post was written by : Surenth

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்துக் காட்டுவேன் என தனது அம்மாவிக்கு விடுத்த சவாலை நிறைவேற்றியுள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் தான் நடித்ததன் மூலம் இந்த சவாலை வெற்றிக் கொண்டுள்ளதாகவும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் நான் பிராமண பெண்ணாக நடித்துள்ளேன். திரைப்படத்தின் கதையை விக்னேஷ் சிவன் சொன்ன விதம் பிடித்திருந்தது. என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது.

நான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் இருந்தே நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை. என் அம்மா சூர்யாவின் தந்தை சிவக்குமாருடன் 3 திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஒரு நாள் நான் சிவக்குமாரின் மகனுடன் நடிக்கிறேனா இல்லையா என்று பாருங்க என நான் அம்மாவிடம் சபதம் செய்தேன். இதன்படி, ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் நடித்து அந்த சவாலை வெற்றிகொண்டுள்ளேன்” என அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg