Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமது ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது: முஸ்லிம் காங்கிரஸ்

In இலங்கை
Updated: 11:26 GMT, Jan 2, 2018 | Published: 11:25 GMT, Jan 2, 2018 |
0 Comments
1111
This post was written by : Risha
maxresdefault

புத்தளம் பிரதேச சபையிலும், வண்ணாத்திவில்லு பிரதேச சபையிலும் எங்களுடைய ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் இக்கட்சி எவ்வளவு செல்வாக்குப் பெற்று நிற்கின்றது என்பதை கணிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான தேர்தலாக இது அமையவுள்ளது.

நாங்கள் அரசாங்கத்திலே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்து மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்வது இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதில் எங்களுக்குள் இருந்த தீவிரம், அதில் காட்டிய ஈடுபாடு, அதனூடாக மக்கள் மத்தியில் எமது கட்சி செயற்பாட்டாளர்கள் காட்டிய அக்கறை என்பன இந்தக் கட்சிக்கு புதியதொரு உற்சாகத்தை தந்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகக்கூடிய அதிகார மையமாக இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலை எமது கட்சி தன்னுடைய பட்டியலாக மாற்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருநுவர ஆகிய சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். ஏனைய முஸ்லிம் பெரும்பான்மை சபைகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றோம். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சி, மயில் சின்னம் என்பன போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகின்றது. இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலான சபைகளை வெற்றிகொள்ளும் நிலைமையை அங்கு உருவாக்கியுள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg