Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயர் நீதிமன்ற தடையை மீறி அரச போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

In இந்தியா
Updated: 05:33 GMT, Jan 6, 2018 | Published: 05:33 GMT, Jan 6, 2018 |
0 Comments
1161
This post was written by : Varothayan

தமிழக அரச போக்குவரத்து கழக ஊழியர்கள் உயர் நீதிமன்ற தடையையும் மீறி இன்று மூன்றாவது நாளாகவும் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டாத காரணத்தினால், நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு அரச போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்த அளவிலான பேரூந்துகளே சேவையில் ஈடுபடுவதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேரூந்துகளும், முச்சக்கரவண்டிகளும் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க ஆரம்பித்தனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு அமைவாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவையும் மீறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg