Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருதரப்பு தொடருக்காக கெஞ்சுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஜாவித் மியான்டட்

In கிாிக்கட்
Updated: 06:50 GMT, Jan 6, 2018 | Published: 06:49 GMT, Jan 6, 2018 |
0 Comments
1171
This post was written by : Elakkiya

இருதரப்பு தொடருக்காக இந்தியாவிடம் பாகிஸ்தான் கிரிக்கட் சபை கெஞ்சுவதற்கு பதிலாக பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார்.

மும்பை நகரில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்துக் கொண்ட இந்திய அணி இன்றுவரை பாகிஸ்தான் மண்ணில் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை.

இந்நிலையில் இந்திய அணியுடன் இருதரப்பு தொடர்களை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கட் சபையும் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கட் சபையிலும் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜாவித் மியான்டட், “இந்தியாவுடன் கிரிக்கட் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கட் ஒன்றும் செத்துவிடாது. எனவே இந்திய அணியுடனான கிரிக்கட் என்பதை மறந்து பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் சபை முன்வர வேண்டும்'” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 10 வருடங்களாக இந்திய அணியுடன் விளையாடவில்லை என்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கட் நலிந்து விட்டாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg