Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூரநோக்குடனேயே மக்கள் காங்கிரஸ் செயலாற்றுகின்றது: ரிஷாட்!

In இலங்கை
Updated: 10:37 GMT, Jan 6, 2018 | Published: 11:29 GMT, Jan 6, 2018 |
0 Comments
1094
icon_com
This post was written by : Ravivarman
ihiuhuih

சமூகச் சிந்தனையுடனும், தூரநோக்குடனும் உருவாக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் தனது பணிகளை நேர்மையுடனும், உண்மையுடனும் முன்னெடுத்து வருகின்றது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாம் சிறிய கட்சியாக இருந்த போதும், இறைவனை முன்னிறுத்தி மிகவும் தைரியமாக கடந்த அரசிலிருந்து வெளியேறி, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம்.

தமிழ்ச் சமூகமும், மலையக சமூகமும், முஸ்லிம் சமூகமும் மஹிந்தவுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர், அப்போதைய மஹிந்த அரசில் அங்கம் வகித்த சிறிய கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்த போது, நாம்துணிச்சலுடன் முடிவெடுத்து மைத்திரியை ஆதரிக்க முன்வந்தோம்.

யுத்தம் முடிவடைந்திருந்த போது, பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள ஒருசில மதகுருமார்கள் இனவாதத்தைத் தூண்டி சிறுபான்மையினரின் மத உரிமைகளை அடக்குகின்ற – ஒடுக்குகின்ற, அவர்களின் பொருளாதாரத்தை நாசமாக்குகின்ற வேலைகளில் ஈடுபட்டனர்.

இனவாத மதகுருமாரின் நடவடிக்கைகளை அடக்க முடியாது, அந்த அசிங்கங்களை பார்த்துக்கொண்டு இருந்த நாட்டுத்தலைவரை, வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் அடிகோலி இருக்கிறோம்.

மக்கள் காங்கிரஸ் மக்களின் அடிநாதத் துன்பங்களை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சியே.சமூக சிந்தனையுடனும், தூரநோக்குடனும் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி, தனது பணிகளை நேர்மையுடனும், உண்மையுடனும் முன்னெடுத்து வருகின்றது.

அகதியாக வெளியேற்றப்பட்டு, அகதிகளுடன் அகதியாக வாழ்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்ததன்விளைவினாலேயே, இந்த சமூகத்துக்கு விடிவுகிட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்குள் உந்தப்பட்டேன்.

அகதி மக்களின் வறுமை, கொடுமையான வாழ்வு, மழை வந்தால் ஒழுகும் கொட்டில்களில் அவர்கள் பட்ட துன்பங்கள்தான், எனது அரசியல் செயற்பாடுகளை தீவிரப்படுத்தியது’ என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)