Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் தீர்வுத் திட்டம்: ரிஷாட்

In இலங்கை
Updated: 11:38 GMT, Jan 6, 2018 | Published: 11:59 GMT, Jan 6, 2018 |
0 Comments
1333
This post was written by : Ravivarman

முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

காரைதீவு, மாவடிப்பள்ளியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிக்கையில்,

‘அஷ்ரபின் மறைவின் பின்னர் தலைமைப் பதவியைக் கெஞ்சிப்பெற்ற தற்போதைய தலைவரின் நடவடிக்கைகள், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அக்கறையை நமக்கு வெளிப்படுத்தவில்லை.

2002 ஆம் ஆண்டு நோர்வேயின் உதவியுடன் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்தில், முஸ்லிம்கள் தொடர்பில் அப்போதைய அரசு எந்தவிதமான கரிசனையும் செலுத்தாமல் இருந்தபோது, ஆட்சியின் பங்காளியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்தார்.

இரண்டு பேரினவாதக் கட்சிகளும் புதிய தீர்வுத்திட்டத்தை எவ்வாறாவது கொண்டுவர வேண்டுமென்று முயற்சித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அந்தத் தீர்வுத்திட்டம் முஸ்லிம்களுக்கு பாதகமான ஒரு விடயமா? என்பதைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் ‘தீர்வுத்திட்டத்தை எவ்வாறாவது நடைமுறைப்படுத்துவோம்’ என சூளுரைத்திருப்பது சமூகத்தின் மீதான முஸ்லிம் காங்கிரஸின் அக்கறையை புலப்படுத்துகின்றது.

சமுதாயத்துக்கான இந்தப் பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும், நாம் துவண்டு விடப்போவதில்லை. மாற்றத்துக்கான மக்களின் எழுச்சியில் நீங்களும் உங்களைப் பங்காளர்களாக்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg