Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரபரப்பான ஆட்டத்தில் தோற்றது கோவா!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:00 GMT, Jan 7, 2018 | Published: 05:00 GMT, Jan 7, 2018 |
0 Comments
1083
This post was written by : Puvanes

இந்திய சுப்பர் லீக் கால்பந்து தொடரின் 40ஆவது லீக் போட்டியில் கோவா எப்.சி அணியை, நோர்த்ஈஸ்ட் யுனைட்டட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இரவு கவுஹாத்தியில் இடம்பெற்ற குறித்த போட்டியின் ஆரம்பம் முதலாகவே இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டன.

போட்டியின் 21ஆவது நிமிடத்தில் மார்சின்ஹோ மூலம் முதலாவது கோலினை யுனைட்டட் அணி பதிவு செய்து கொண்டது. அடுத்த 28 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்காக மனுவல் அரனா கோல் ஒன்றினைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன்படி இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைய ஆட்டம் மேலும் பரபரப்படைந்தது. தொடர்ந்த 52 ஆவது நிமிடத்தில் சைமின்லென் யுனைட்டட் அணிக்காக மேலும் ஒரு கோலினை அடித்தார்.

ஆட்டநேரம் முடியும் வரையில் கோவா அணியினால் கோல் அடிக்க முடியாத நிலையில் 2-1 என்ற கணக்கில் யுனைட்டட் அணி வெற்றியடைந்தது. இந்த வெற்றியுடன் 7 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட யுனைட்டட் அணி தொடரின் புள்ளி வரிசைப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg