Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் சுகாதார அமைச்சர் காலமானார்!

In இலங்கை
Updated: 07:47 GMT, Jan 8, 2018 | Published: 07:47 GMT, Jan 8, 2018 |
0 Comments
1167
This post was written by : Anojkiyan

முன்னாள் சுகாதார அமைச்சர்களில் ஒருவரான ரஞ்சித் அதபத்து, தனது 84 வயதில் இன்று (திங்கட்கிழமை) காலை காலமானார்.

1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன் முறையாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற அவர், இலங்கை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டத்தையும் பெற்றுள்ளார்.

1933ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி பிறந்த இவர், கடந்த 1977ஆம் நடந்த 8வது நாடாளுமன்ற தேர்தலின் மூலம் அரசியலுக்கு பிவேசித்தார். அப்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 6000 வாக்குகள் வித்தியாசத்தில் ரஞ்சித் அதபத்து தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg