Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகம்புர துறைமுகத்தில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

In இலங்கை
Updated: 07:55 GMT, Jan 9, 2018 | Published: 07:54 GMT, Jan 9, 2018 |
0 Comments
1127
This post was written by : Risha

துறைமுக அதிகார சபையில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் மாகம்புர துறைமுக பிரதான வாயிலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் பத்து ஊழியர்கள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக போராட்ட ஊழியர் சங்க ஏற்பாட்டாளர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கும்வரை போராட்டத்தை கைவிடப் போதவதில்லை என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது பிள்ளைகளை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக் கொள்ளுமாறு கோரி, மாகம்புர துறைமுக ஊழியர்களின் பெற்றோர் கடந்த நொவம்பர் மாதம் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும், அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg