Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தி தப்பிக்க முடியாது: அசாத் சாலி

In இலங்கை
Updated: 12:46 GMT, Jan 9, 2018 | Published: 12:46 GMT, Jan 9, 2018 |
0 Comments
1216
This post was written by : Varshini

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வை நடத்தி தப்பிக்க முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளரான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நாளைய தினம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், மக்களை ஏமாற்றி மக்களை திசைதிருப்பும் பிரதமரின் முயற்சியே நாளைய நாடாளுமன்ற அமர்வென அசாத் சாலி குறிப்பிட்டார். மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை 1254 பக்கங்களை கொண்டுள்ள நிலையில், நாளைய தினமே விவாதம் நடத்தினால் குறித்த அறிக்கையை முழுமையாக வாசிப்பதற்கு உறுப்பினர்களுக்கு நேரம் இல்லையென அசாத் சாலி குறிப்பிட்டார்.

இந்நிலையில், விசாரணை அறிக்கையின் பிரதியை நாளைய தினம் கையளித்துவிட்டு, ஒரு வாரத்தின் பின்னரே அது தொடர்பான விவாதம் நடத்தப்பட வேண்டுமென அசாத் சாலி குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg