Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடுப்பனவு கோாி ஏறாவூர் நகரசபை சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

In இலங்கை
Updated: 12:46 GMT, Jan 10, 2018 | Published: 12:32 GMT, Jan 10, 2018 |
0 Comments
1064
This post was written by : Arul Jesu
Eravur Municipal

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் இன்று (புதன்கிழமை) காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூர் நகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்திலும் இவா்கள் ஈடுபட்டனர்.

நாளாவித அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள அறுபத்தெட்டு சிற்றூழியர்களுக்கான கொடுப்பனவினை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளமையை ஆட்சேபித்தும், குறித்த கொடுப்பனவினை வழங்கக்கோரியும் இப்போராட்டம் நடைபெறுகிறது.

சிற்றூழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் ஏறாவூர் நகரப்பகுதியில் குப்பை அகற்றும் பணி உட்பட்ட பல்வேறு பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சிற்றூழியர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஒரு வருட காலத்திற்குப் பணியாற்றுவற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும், கடந்த நவம்பர் மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லையென மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)