Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணேமுல்ல மேம்பாலம் இன்றுமுதல் மக்கள் பாவனைக்கு

In இலங்கை
Updated: 04:59 GMT, Jan 11, 2018 | Published: 04:29 GMT, Jan 11, 2018 |
0 Comments
1245
This post was written by : Elakkiya

கம்பஹா மாவட்டம் கணேமுல்ல நகரில் அமையப்பெற்றுள்ள மேம்பாலம் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் மேம்பால திறப்பு விழா நடைபெறவுள்ளது.

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டுமாண பணிகள் 20 மாத காலத்திற்குள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. சுமார் 1700 மில்லியன் ரூபா செலவில் 504 மீற்றர் தூரத்துக்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாக விளங்கும் கணேமுல்ல புகையிரத நிலையத்தை கடந்து தினமும் சுமார் 90 ரயில்கள் கொழும்பு செல்கின்றன. இதன்காரணமாக ரயில்வே வாசல்கள் அடிக்கடி மூடப்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து தாமதங்களும் ஏற்படுகின்றது. இதனை எளிதாக்கும் வகையில் குறித்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் போக்குவரத்தை கடக்கும் இதுபோன்ற மேம்பாலம் எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. 353 மீற்றர் நீளமுள்ள பொல்கஹவெல மேம்பாலம் 2.203 பில்லியன் கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg