Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் விபத்துக்குள்ளான எண்ணெய்த்தாங்கியில் வெடிப்பு

In உலகம்
Updated: 12:05 GMT, Jan 14, 2018 | Published: 12:05 GMT, Jan 14, 2018 |
0 Comments
1175
This post was written by : Suganthini

சீனாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான எண்ணெய்த்தாங்கிக் கப்பல், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெடித்துள்ளதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.

இந்தக் கப்பல் வெடித்தபோது, சுமார் 800 முதல் ஆயிரம் மீற்றர் உயரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஸாங்காய் மாகாணத்தில், பனாமா நாட்டுப் பதிவுடைய ஸாஞ்சி எண்ணெய்த்தாங்கிக் கப்பலும், ஹொங்கொங் நாட்டுப் பதிவுடைய சிஃஎப். கிறிஸ்ரல் சரக்குக் கப்பலும் ஒன்றுடனொன்று மோதி கடந்த வாரம் விபத்துக்குள்ளாகின.

இதன்போது, ஈரானைச் சேர்ந்த 30 மாலுமிகளும்;; பங்களாதேஷைச் சேர்ந்த 2 மாலுமிகளும் காணாமல் போயுள்ள நிலையில், மூவரின் சடலங்களை மாத்திரம்; கண்டெடுத்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எண்ணெய்த்தாங்கிக் கப்பல், ஈரானிலிருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொன் எண்ணையைத் சுமந்துகொண்டு வந்த அதேவேளை, சரக்குக் கப்பல் சுமார் 64 ஆயிரம் தொன் தானியங்களை அமெரிக்காவிலிருந்து சுமந்துகொண்டு சீனாவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg