Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி மைத்திரியை ஆவேசப்படுத்திய வார்த்தைகள்!

In இலங்கை
Updated: 03:34 GMT, Jan 17, 2018 | Published: 03:34 GMT, Jan 17, 2018 |
0 Comments
1376
This post was written by : Varshini

”ஜனாதிபதி எங்களை திருடர்கள் என குற்றஞ்சாட்டினார். நாங்கள் அவரை பிக்பொக்கெட் ஜனாதிபதி என்றோம். ராஜபக்ஷவிற்கு அவர் செய்தது போல ஐ.தே.க.விற்கும் முதுகில் குத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறிய வார்த்தைள் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரி அமைச்சரவையின் இருந்து இடைநடுவில் வெளியேறியுள்ளார்.

பிணை முறி விவகாரம் தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட முறையை, ஜனாதிபதி கடுமையாக கண்டித்திருந்தார். புறக்கோட்டையில் திருடர்கள் திருவிட்டு ‘திருடன் திருடன்’ என ஓடுவதைப் போல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடந்துகொண்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் ஜனாதிபதியை கடிந்துகொண்டதோடு, மரிக்காரின் வார்த்தைகளை தொடர்ந்து ஜனாதிபதி கோபத்துடன் வெளியேறியுள்ளார்.

வெளியேறுவதற்கு முன்பாக சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி, ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக விசனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, தான் ஒருபோதும் நன்றி மறந்து செயற்படவில்லையென உருக்கமாக தெரிவித்துவிட்டு, கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறியதாக அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் பிரதமர் ரணில் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரியை சமரசப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg