Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் கடும் காற்று: போக்குவரத்து பாதிப்பு

In
Updated: 10:46 GMT, Jan 18, 2018 | Published: 10:44 GMT, Jan 18, 2018 |
0 Comments
1171
This post was written by : Risha

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் பனி மழை காரணமாக பாரிய போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று (புதன்கிழமை) இரவு மணிக்கு 80 மைல் வேகத்தில் கடும் காற்று வீதிய நிலையில், அநாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண காலநிலையின் காரணமாக மரங்கள் முறிந்து தண்டவாளங்களில் விழுந்ததில் ரயில் பயணங்களிலும்  தாமதம் ஏற்பட்டுள்ளது.

காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்ற நிலையில், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg