Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலகலப்பு – 2 வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

In சினிமா
Updated: 07:29 GMT, Jan 19, 2018 | Published: 07:29 GMT, Jan 19, 2018 |
0 Comments
1081
This post was written by : Ravivarman

சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு – 2’ திரைப்படம் பெப்ரவரி 9 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலகலப்பு படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி , அதன் 2ம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் திகதி தள்ளி வைக்கப்பட்டது.

பொங்கலுக்கு முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளியானதால், இப்படத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று கருதிய படக்குழுவினர், இப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், ரோபோசங்கர், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg