Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபாரமான ஆட்டம் ! – காலிறுதிக்கு தகுதி பெற்றார் ரபேல் நடால்

In டெனிஸ்
Updated: 10:14 GMT, Jan 21, 2018 | Published: 10:14 GMT, Jan 21, 2018 |
0 Comments
1132
This post was written by : Puvanes

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஜர்ன்டினாவின் டியகோ ஸ்வோர்ட்ஸ்மேனுடன் களம் கண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த போட்டியில் 6-3, 6-7, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற நடால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

31 வயதான ரபேல் நடால் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் நிலை வீரராக உள்ளார். இதுவரையிலும் 75 பட்டங்களை வென்றெடுத்துள்ளார் இதன்படி தற்போதைய அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் இவர் பட்டம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg