Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நளினி உள்ளிட்டோரை விடுவிக்க சிறைத்துறையினர் பரிந்துரை

In இந்தியா
Updated: 18:51 GMT, Feb 9, 2018 | Published: 07:06 GMT, Feb 9, 2018 |
0 Comments
1161
This post was written by : Kemasiya

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தனை விடுதலை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நன்னடத்தை அடிப்படையில் இவர்களை விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர், தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளதாக நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்குமேல் தண்டனை அனுபவிக்கும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படக்கூடியவர்களின் பட்டியலை தமிழகஅரசு கோரியிருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமைய நன்னடத்தையின் அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

சிறைத்துறையினரின் பரிந்துரைக்கடிதம் தமிழகஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றது.

என்றபோதிலும், இவர்களின் விடுதலைக் குறித்து வழக்கு உச்சநீதிமன்றதில் நடைபெற்று வருவதால், அவர்களின் விடுதலை கேள்விக்குறியானதாகவே இருந்து வருகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg