Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேலின் யுத்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: விமானிகள் உயிர் தப்பினர்

In உலகம்
Updated: 07:35 GMT, Feb 10, 2018 | Published: 07:35 GMT, Feb 10, 2018 |
0 Comments
1135
This post was written by : Suganthini

இஸ்ரேலுக்குச் சொந்தமான யுத்த விமானமொன்று, சிரிய விமான எதிர்ப்பாளர்களினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்குச் சொந்தமான ஃஎப்.16 எனும் யுத்த விமானமே, சிரியாவில் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த விமானத்திலிருந்த விமானிகள் இருவரும் உயிர் தப்பியுள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளை அழிக்கும் வகையில், மேற்படி விமானம் குறுக்கீடு செய்துள்ளதாகவும், இந்நிலையில், மேற்படி விமானம் சிரிய எதிர்ப்பாளர்களினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமது நாட்டை உளவு பார்த்த ஈரானுக்குச் சொந்தமான ஆளில்லா விமானத்தை இடைமறித்துச்  சுட்டு வீழ்த்தியதாகவும்,  இஸ்ரேல் அரசாங்கம்  தெரிவித்துள்ளது.

மேலும்,  சிரியா மற்றும் ஜோர்டானுடனான இஸ்ரேல் எல்லையில், பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டு வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg