Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

In கிாிக்கட்
Updated: 08:01 GMT, Feb 13, 2018 | Published: 08:00 GMT, Feb 13, 2018 |
0 Comments
1182
This post was written by : Elakkiya
kane

முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும் நியூஸிலாந்து 197 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணியின் சார்பில் வில்லியம்ஸன் 72 ஓட்டங்களையும் குப்தில் 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மார்க் வூட் மற்றும் ரஷிட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஜோர்தான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதன்படி 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)