Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெதர்லாந்தில் பிளாஸ்டிக் பாவனைக்கு கட்டுப்பாடு!: பல்பொருள் அங்காடி நிலையம் முயற்சி

In ஐரோப்பா
Updated: 11:56 GMT, Feb 28, 2018 | Published: 11:56 GMT, Feb 28, 2018 |
0 Comments
1141
This post was written by : Suganthini

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த நெதர்லாந்திலுள்ள பல்பொருள் அங்காடி நிலையமொன்று முன்வந்துள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்திலுள்ள Ekoplaza எனும் பல்பொருள் அங்காடிக் குழுமம், பிளாஸ்டிக் பைகளில் பொருட்களைப் பொதிசெய்து விற்பனை செய்வதைத் தவிர்த்துக்கொள்ள முன்வந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறைச்சி, அரிசி, சுவையூட்டிகள், பால், இனிப்புப்பண்டம், தானியங்கள், பழங்கள் மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட 700 வகையான உணவுப்பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பொதி செய்வதை மேற்படி நிலையம் தவிர்த்துக்கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் பாவனையினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைக்கு தமது நிலையம் முன்வந்துள்ளதாகவும், இந்த வருட இறுதியில் நெதர்லாந்தில் 74 கடைகளில் பிளாஸ்டிக் பாவனை கட்டுப்படுத்தப்பட்டிருக்குமெனவும், Ekoplaza பல்பொருள் அங்காடிக் குழுமம் கூறியுள்ளது.

இதேவேளை, இவ்வாறானதொரு திட்டத்தை பிரித்தானியாவிலும் அமுல்படுத்த பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அண்மையில் அறிவித்திருந்தார். 25 ஆண்டுகால சுற்றுச்சூழல் திட்டத்தின் ஒருபகுதியாகப் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் தெரேசா மே முன்வைத்துள்ளார்.

மேலும், ஐஸ்ஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடி நிலையமொன்று எதிர்வரும் 2023ஆம் ஆண்டளவில் அதன் தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த உறுதியளித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg