Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக உடன்படிக்கையில் நிதிச்சேவையை சேர்க்க ஆர்வம் -ஹேமண்ட்

In
Updated: 07:41 GMT, Mar 8, 2018 | Published: 07:39 GMT, Mar 8, 2018 |
0 Comments
1100
This post was written by : Suganthini

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கையில், நிதிச்சேவையை சேர்த்துக்கொள்ள ஆர்வம் உள்ளதாக, பிரித்தானியாவின் நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரெக்சிற் தொடர்பாக, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான இலவச வர்த்தக உடன்படிக்கையில் நிதிச்சேவையைச் சேர்த்துக்கொள்ள எமக்கு பரஸ்பர ஆர்வம் உள்ளது’ என்றார்.

மேலும், கடந்த காலத்தில் இதுபோன்ற உடன்படிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கனடா மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக உடன்படிக்கைகளில் நிதிச்சேவையைச் சேர்த்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் முயன்றதாகவும், அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg