Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளுக்கிடையிலான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் : மனங்காகுவா

In
Updated: 10:12 GMT, Mar 16, 2018 | Published: 10:01 GMT, Mar 16, 2018 |
0 Comments
1191
This post was written by : S.K.Guna

கருப்பின மற்றும் வெள்ளையின விவசாயிகளுக்கு இடையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர சிம்பாப்வே இன்னமும் விரும்புவதாக தெரிவித்த ஜனாதிபதி எம்மெர்சன் மனங்காகுவா சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான புதிய வழிகளைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆபிரிக்க நாடுகள் மத்தியில் சிம்பாப்வே ஒருகாலத்தில் மிகவும் உறுதியான பொருளாதார நாடாக இருந்தது. ஆயினும் ரொபேர்ட் முகாபே ஆட்சியில் வெள்ளையர்களுக்குச் சொந்தமான விவசாயப்  பண்ணைகள் பலவந்தமாக சுவீகரிக்கப்பட்டபின்னர் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பாப்வே வெளிப்படையான மற்றும் நியாயமான நிலச் சீர்திருத்தத்துடன் கூடிய தீர்வினை வழங்கவேண்டும் என சிம்பாப்வேயின் முன்னாள் கொலனித்துவ ஆட்சியாளரான பிரித்தானியா கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்தே சிம்பாப்வே ஜனாதிபதி எம்மெர்சன் மனங்காகுவா இழப்பீடு வழங்குவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg