Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க உறுதியுடன் உழையுங்கள்: டக்ளஸ் தேவானந்தா

In இலங்கை
Updated: 15:00 GMT, Mar 19, 2018 | Published: 15:00 GMT, Mar 19, 2018 |
0 Comments
1078
This post was written by : poovannan

மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க அனைவரும் அர்ப்பணிப்போடும் ஒற்றுமையோடும் செயற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “நாம்பெற்றுக்கொண்ட வெற்றியும் நமது உழைப்பும் எமது மக்களுக்கு பலாபலன்களையும் விமோசனத்தையும் பெற்றுக்கொடுப்பதற்காக அமைய நாம் உறுதியுடன் செயற்பட வேண்டும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 38 சபைகளில் போட்டியிட்டு 98 ஆசனங்களை பெற்று எமது அரசியல் பலத்தை இதர அரசியல் தரப்பினருக்கு வெளிப்படுத்தியுள்ளது.

நாம் எதிர்பார்த்த வெற்றி எமக்கு கிடைக்காவிட்டாலும், வடக்குக் கிழக்கில் 98 உறுப்பினர்களை நேரடியாகவும் விகிதாசாரப் பட்டியல் ஊடாகவும் வென்றெடுத்துள்ளோம் என்பதுடன் எமது வாக்குகளும் அதிகரித்துள்ளன. இந்த வெற்றிக்காக உழைத்த தோழர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் அபிமானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஊர்காவற்றுறை பிரதேச சபையில், 13 ஆசனங்களில் ஆட்சியமைக்கப் பெற்றிருந்த நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீண்டும் ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg