Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: துரைரெட்ணம்!

In இலங்கை
Updated: 10:19 GMT, Mar 21, 2018 | Published: 10:19 GMT, Mar 21, 2018 |
0 Comments
1140
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு தமிழர் விடுலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள த.ஜெயசந்திரனின் சந்தியப்பிரமாண நிகழ்வு மாங்காடு கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இல்லை. எனவே ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய தேவையே கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளையும் மற்றவர்களையும் மதிக்கக் கூடியவாறு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் மக்கள் தேசியக் கட்சிகளுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் ஒரு ஆணையை வழங்கியிருக்கின்றனர். அதாவது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒருபோதும் பிரிந்துவிடக் கூடாது நீங்கள் அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்.

இல்லாதவிடத்து நாங்கள் எதிர்வரும் தேர்தல்களில் தேசியக் கட்சிகளை நாங்கள் ஆதரிக்க நேரிடும் என்ற செய்தியினை தமிழ் மக்கள் வாக்களிப்பின் ஊடாக வழங்கியிருக்கின்றனர்.

முதற்கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவித நிபந்தனையும் அற்றவகையில் ஆதரவினை வழங்குவதற்கு எமது கட்சி எமது உறுப்பினர்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg